விருத்தாசலத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுமக்கள் எதிர்ப்பு
விருத்தாசலத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுமக்கள் எதிர்ப்பு தொிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
விருத்தாசலம்,
விருத்தாசலம் பாலக்கரை அருகே உள்ள ஒரு வீதியில் சாலை ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதாகவும், சாலையை மீட்டு தர வேண்டும் எனவும் தனிநபர் ஒருவர் ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் அந்த சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற விருத்தாசலம் நகராட்சிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து நேற்று நகராட்சி ஆணையாளர் சேகர் தலைமையில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்காக பொக்லைன் எந்திரம் கொண்டு வரப்பட்டது. இதுபற்றி அறிந்த பொதுமக்கள் ஆக்கிரமிப்புகளை அகற்ற கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், பொக்லைன் எந்திரத்தை சிறைப்பிடித்து போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த விருத்தாசலம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆரோக்கியராஜ் மற்றும் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களை சமாதானப்படுத்தினர். பின்னர் போலீ்ஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.