தனியார் பஸ்சை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்

தனியார் பஸ்சை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.

Update: 2022-06-17 19:20 GMT

பாடாலூர்:

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா நக்கசேலம் வழியாக பெரம்பலூரில் இருந்து துறையூருக்கு பஸ்கள் சென்று வருகின்றன. இதில் பெரும்பாலும் அரசு பஸ்சை தவிர்த்து தனியார் பஸ் ஊருக்குள் வராமல் துறையூருக்கு செல்கிறது. இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள், அந்த தனியார் பஸ்சை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்து வந்த பாடாலூர் போலீசார், கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, தனியார் பஸ் ஊருக்குள் வந்து செல்ல நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததன்பேரில் கிராம மக்கள் கலைந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்