4-வது நாளாக பொதுமக்கள் காத்திருப்பு போராட்டம்

குப்பை கிடங்கு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 4-வது நாளாக பொதுமக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-05-16 17:45 GMT

திருவண்ணாமலை ஒன்றியத்தில் உள்ள தேவனந்தல் ஊராட்சியில் புனல்காடு அருகில் உள்ள மலையை ஒட்டிய இடத்தில் குப்பை கிடங்கு அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 13-ந் தேதி முதல் புனல்காடு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் குப்பை கிடங்கும் அமைக்கும் இடத்தின் அருகில் சாலையோரம் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இன்று 4-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் அவர்கள் ஈடுபட்டனர். இந்த காத்திருப்பு போராட்டத்திற்கு கம்யூனிஸ்டு கட்சியினர், தமிழக விவசாயிகள் சங்கத்தினர் ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் இப்போராட்டத்திற்கு பா.ஜ.க.வினரும் ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் தெற்கு மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமையிலான நிர்வாகிகள் குப்பை கிடங்கு அமைக்கும் இடத்தை பார்வையிட்டு இதுகுறித்து மாவட்ட கலெக்டரிடம் முறையிடுவதாக தெரிவித்தனர்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்