சாலைகளை சீரமைக்கக் கோரி பொதுமக்கள் போராட்டம்

பாளையங்கோட்டையில் சாலைகளை சீரமைக்கக் கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-12-29 20:36 GMT

பாளையங்கோட்டை:

பாளையங்கோட்டை மனகாவலம்பிள்ளை நகர் கென்னடி தெருவை சேர்ந்த பொதுமக்கள் நேற்று ஒன்று திரண்டனர். அங்கு ஓரிடத்தில் தரையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், மனகாவலம்பிள்ளை நகரில் சாலைகள் மோசமாக உள்ளன. முறையான வாறுகால்கள் இல்லாததால் சாக்கடை கழிவுநீர் சாலையில் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே சாலைகளை சீரமைத்து தர வேண்டும் என்று வலியுறுத்தினர்.

இதுகுறித்து தகவல் அறிந்த பாளையங்கோட்டை போலீசார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, பொதுமக்களின் கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்றப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்