சங்கராபுரம் தாலுகா பிரித்ததை கண்டித்துபொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

சங்கராபுரம் தாலுகா பிரித்ததை கண்டித்து வடபொன்பரப்பி பஸ் நிறுத்தத்தில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2023-09-06 18:45 GMT

மூங்கில்துறைப்பட்டு

சங்கராபுரம் தாலுகா வடபொன்பரப்பி குறுவட்டத்துக்குட்பட்ட லக்கிநாயக்கன்பட்டி, புதுப்பட்டு, ரங்கப்பனூர், புளியங்கோட்டை, வடபொன்பரப்பி, வடக்கீரனூர், மேல் சிறுவள்ளூர், மணலூர், பவுஞ்சிப்பட்டு, பிரம்மகுண்டம் உள்ளிட்ட பகுதியை பிரித்து புதிய தாலுகா அலுவலகமாக வாணாபுரத்தில் இணைக்கப்பட்டுள்ளது. இதை கண்டித்து நேற்று வடபொன்பரப்பி பஸ் நிறுத்தத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த பொதுமக்கள், வணிகர்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசினர். அப்போது வடபொன்பரப்பி வருவாய் குறுவட்டத்துக்குட்பட்ட 23 கிராமங்களை மீண்டும் சங்கராபுரம் தாலுகாவுடன் இணைக்க வேண்டும், புதிதாக பிரிக்கப்பட்டுள்ள வாணாபுரம் தாலுகா அலுவலகம் செல்ல வேண்டுமென்றால் எந்தவிதமான பஸ்வசதிகள் இல்லாததால் முதியவர்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், விவசாயிகள் கடும் அவதி அடைகின்றனர் என்று கூறி கோஷம் எழுப்பினர். இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்