லாரியை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்

லாரியை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-12-07 19:06 GMT

கிருஷ்ணராயபுரம் அடுத்த வீரியபாளையம் ஊராட்சி கண்ணமுத்தம்பட்டியில் சிறிய தொழிற்சாலை ஒன்று கடந்த 8 மாதங்களுக்கும் மேலாக இயங்கி வருவதாக கூறப்படுகிறது. இந்த தொழிற்சாலையில் கொட்டாங்குச்சிகளை எரித்து அதிலிருந்து கிடைக்கும் சாம்பலை கார்பன் தயாரிப்புக்காக ஏற்றுமதி செய்து வருகின்றனர். கொட்டாங்குச்சியை அப்பகுதியில் எரிப்பதால் அப்பகுதியில் அதிகளவு புகை சூழ்ந்து பொதுமக்கள் சுவாசிக்க முடியாமல் மூச்சுத்திணறல் மற்றும் கண் எரிச்சல் ஏற்பட்டு வருகிறது. இந்தநிலையில் நேற்று தொழிற்சாலைக்கு கொட்டாங்குச்சி ஏற்றி கொண்டு வந்த லாரியை அப்பகுதி பொதுமக்கள் மற்றும் பா.ஜ.க.வினர் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த லாலாபேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோதி மற்றும் வருவாய் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து, பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அந்த லாரி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் போராட்ட குழுவினர் கிருஷ்ணராயபுரம் தாசில்தார் மோகன்ராஜை நேரில் சந்தித்து மனு அளித்து அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்