அரசு பள்ளி தலைமை ஆசிரியர் இடமாற்றத்தை கண்டித்து பொதுமக்கள் மறியல்

அரசு பள்ளி தலைமை ஆசிரியர் இடமாற்றத்தை கண்டித்து பொதுமக்கள் மறியல்

Update: 2022-09-30 20:51 GMT

சமயபுரம்:

மண்ணச்சநல்லூர் அருகே திருவெள்ளறையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றிய சண்முகவேல், துறையூர் அருகே உள்ள உப்பிலிபுரத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதை கண்டித்து நேற்று காலை திருவெள்ளறை பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பள்ளி நுழைவு வாயில் முன்பு திரண்டு, தலைமை ஆசிரியர் சிறப்பாக செயல்படுவதாகவும், அவரை இடமாற்றம் செய்ததை கண்டித்தும், உடனடியாக அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியும் கோஷமிட்டனர். இதைத்தொடர்ந்து அவர்கள் திருச்சி- துறையூர் செல்லும் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இது பற்றி தகவல் அறிந்த மண்ணச்சநல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அருண்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் இது குறித்து கல்வித்துறை உயர் அதிகாரிகளிடம் முறையிட்டு தீர்வு காண போலீசார் அறிவுறுத்தினர். இதைத்தொடர்ந்து மறியல் போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் அமைதியாக கலைந்து சென்றனர். மறியலால் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.



Tags:    

மேலும் செய்திகள்