பசலிகுட்டை சுப்பிரமணியசுவாமி கோவில் திருவிழா ஏலத்தை நடத்த பொதுமக்கள் எதிர்ப்பு

சுற்றுச்சுவரை சீரமைக்காததால் பசலிகுட்டை சுப்பிரமணியசுவாமி கோவில் திருவிழா ஏலத்தை நடத்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

Update: 2022-06-20 18:19 GMT


திருப்பத்தூர் தாலுகா பசலிகுட்டை கிராமத்தில் மலைமீது பிரசித்தி பெற்ற சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவில் சுற்றுச்சுவர் கடந்த 9 மாதங்களுக்கு முன்பு பெய்த கனமழை காரணமாக இடிந்து விழுந்தது. ஆனால் இதுவரை சுற்றுச்சுவர் சீரமைக்கப்படவில்லை என தெரிகிறது.

ஆடிப்பெருக்கு விழா கொண்டாட உள்ள நிலையில் கோவிலில் ஒலிபெருக்கி, ராட்டினம், பலகாரக்கடை, வாகன நிறுத்தும் உரிமம் ஆகியவற்றுக்கான ஏலத்தை விட கோவில் நிர்வாகம் முடிவு செய்திருந்தது.

ஆனால் சுற்றுச்சுவர் சீரமைக்கப்படாவிட்டால் திருவிழாவை நடத்தவிட மாட்டோம். ஏலத்தையும் நடத்த விடமாட்டோம் என அந்த பகுதி பொதுமக்கள் கோவிலில் திரண்டனர்.

தகவலறிந்த திருப்பத்தூர் மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் கே.எஸ்.அன்பழகன், அறங்காவலர் உறுப்பினர் கணேசன், செயல் அலுவலர் அண்ணாமலை, ஊராட்சி மன்ற தலைவர் பாலாஜி உள்ளிட்டோர் நேரில் சென்று இடிந்து விழுந்த சுற்றுச்சுவரை நேரில் பார்வையிட்டு திருவிழா தொடங்குவதற்கு முன்பு சுற்றுச் சுவர் கட்டித்தர நடவடிக்கை எடுப்பது குறித்தும் மேலும் குடிநீர், கழிப்பறை, வசதி செய்து தருவதாகவும் பொதுமக்களிடம் கூறினார்கள்.

பின்னர் கோவில் கும்பாபிஷேகம் நடத்தப்படும் என்றும் உறுதி அளித்தனர். அதற்கு கிராம மக்கள் திருவிழா நடத்துங்கள் தியாகத்தை நடத்த விடமாட்டோம் என கூறினார்கள். பொதுமக்கள் சமாதானம் அடைவில்லை. எனவே சப்-கலெக்டர் தலைமையில் அமைதி கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

=========

Tags:    

மேலும் செய்திகள்