குமரி-கேரள எல்லையில் கழிவுகளை கொட்டுவதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு

குமரி-கேரள எல்லையில் கேரள பகுதியில் வெள்ளறடை ஊராட்சி அமைந்துள்ளது.

Update: 2023-01-27 03:48 GMT

அருமனை,

குமரி-கேரள எல்லையில் கேரள பகுதியில் வெள்ளறடை ஊராட்சி அமைந்துள்ளது. இதன் அருகே தமிழக பகுதியில் மாங்கோடு ஊராட்சி உள்ளது. இந்த இரண்டு ஊராட்சிகளும் இணையும் எல்லைப் பகுதியில் வெள்ளறடை ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள கழிவுகளை கொட்ட கேரள அரசு இடம் தேர்வு செய்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வெள்ளறடை கிராம மக்கள் கேரள அரசுக்கு எதிராக உண்ணாவிரதம், கடையடைப்பு போன்ற போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் வெள்ளறடை கிராமத்திற்கு அருகில் அமைந்துள்ள தமிழகத்தின் மாங்கோடு ஊராட்சி பகுதி மக்களும் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர். இதுதொடர்பாக மாங்கோடு மற்றும் புலியூர்சாலை ஊராட்சி மன்றங்களில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பொதுமக்கள் அதிகமாக வாழும் பகுதியில் கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்த பகுதி மக்கள் கேரள மற்றும் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்