மயிலாடுதுறையில், புதிய பாலம் கட்டக்கோரி ஆற்றில் இறங்கி பொதுமக்கள் போராட்டம்

மயிலாடுதுறையில், புதிய பாலம் கட்டக்கோரி ஆற்றில் இறங்கி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-10-03 18:45 GMT

மயிலாடுதுறை திருமஞ்சன வீதியில் காவிரி ஆற்றின் குறுக்கே 1, 8, 9 ஆகிய 3 வார்டு மக்களின் பிரதான போக்குவரத்திற்காக கடந்த 2001-ம் ஆண்டு நடைபாலம் கட்டப்பட்டது. இந்த பாலம் சேதம் அடைந்துள்ளது. இதை அகற்றி புதிய பாலம் கட்ட வலியுறுத்தி நேற்று மூவேந்தர் முன்னேற்ற கழகம் சார்பில் போராட்டம் நடந்தது. அப்போது மாநில இளைஞரணி துணைசெயலாளர் கில்லி பிரகாஷ் தலைமையில் ஏராளமானோர் கண்ணில் கருப்புத்துணி கட்டி காவிரி ஆற்றில் இறங்கி கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து இந்த போராட்டம் கைவிடப்பட்டது. இதில், மயிலாடுதுறை ஒன்றிய செயலாளர் பாலமுருகன், நகர அமைப்பாளர் முகமது நசீர், முன்னாள் நகர செயலாளர் ராம்குமார் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்