மன்னார்குடி அருகே குடிநீர் வழங்கக்கோரி காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்
மன்னார்குடி அருகே குடிநீர் வழங்கக்கோரி காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மன்னார்குடி அருகே குடிநீர் வழங்கக்கோரி காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மின்தடை
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள சவளக்காரன் கிராமத்தில் கடந்த 2 நாட்களாக அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வந்தது. இதனால் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளில் தண்ணீர் நிரப்ப முடியாமல் குடிநீர் தட்டுப்பாடு நிலவியது.
இந்த நிலையில் சீரான மின் வினியோகம் வழங்க வேண்டும், குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று மாலை பொதுமக்கள் காலிக் குடங்களுடன் மன்னார்குடி- திருவாரூர் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து துணை போலீஸ் சூப்பிரண்டு பாலச்சந்திரன் மற்றும் மின்வாரிய அதிகாரிகள் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
போக்குவரத்து பாதிப்பு
மேலும் அங்கு மின் வினியோகம் வழங்க ஏற்பாடு செய்தனர். இதையடுத்து மறியல் கைவிடப்பட்டது. இதனால் மன்னார்குடி - திருவாரூர் சாலையில் 2½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.