பொதுமக்களின் பிரச்சினை உடனுக்குடன் தீர்க்கப்படும்

பொதுமக்களின் பிரச்சினை உடனுக்குடன் தீர்க்கப்படும் என தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. கூறினார்.

Update: 2022-10-02 19:39 GMT

ராஜபாளையம்,

ராஜபாளையம் அருகே செட்டியார்பட்டியில் மாவட்ட பார்வை தடுப்பு சங்கம் மற்றும் சக்தி கண் மருத்துவமனை இணைந்து நடத்திய சிறப்பு பொது மருத்துவ முகாமை தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தனர். அதனைதொடர்ந்து முகவூர் ஊராட்சி, அம்பாள் கலாநிலையம் தொடக்கப்பள்ளியில் மரக்கன்று நட்டு வைத்தனர். பின்னர் முகவூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் கிராம சபை கூட்டம் தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. தலைமையில் நடைபெற்றது. தனுஷ்குமார் எம்.பி. முன்னிலை வகித்தார். அப்போது தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. கூறுகையில், பொதுமக்களின் பிரச்சினைகள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தி உடனடியாக தீா்வு கிைடக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இதில் மருத்துவர் ரவிக்குமார், செட்டியார்பட்டி சேர்மன் ஜெயமுருகன், பேரூர் கழக செயலாளர் இளங்கோவன், ஊரக வட்டார வளர்ச்சி அலுவலர் வசந்தகுமார், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் சுரேஷ், முகவூர் ஊராட்சி மன்ற தலைவர் முனியசாமி, ஊராட்சி அலுவலர் பால்வண்ணன், மாவட்ட மகளிர் துணை அமைப்பாளர் மாலதி, ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் பிரபாகரன், ஒன்றிய கவுன்சிலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Tags:    

மேலும் செய்திகள்