செல்போன் கோபுரம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு
பாவூர்சத்திரம் அருகே செல்போன் கோபுரம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
பாவூர்சத்திரம்:
பாவூர்சத்திரம் அருகே கரிசலூர் பஸ் நிறுத்தம் அருகே ஏராளமான வீடுகள் உள்ளது. இந்த வீடுகளின் அருகில் தனிநபர் இடத்தில் தனியார் செல்போன் கோபுரம் அமைக்க பணிகள் தொடங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனை அறிந்த அந்த ஊர் பொதுமக்கள் அங்கு திரண்டு வந்து செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த பாவூர்சத்திரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கவிதா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பின்னர் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.