உரக்கிடங்கு அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு

உரக்கிடங்கு அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து அமைச்சர், எம்.எல்.ஏ.க்களிடம் மனு வழங்கினர்.

Update: 2023-05-30 18:09 GMT

ஆலங்காயம் - பெத்தூர் மேட்டு தெரு பகுதியில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு அங்குள்ள விவசாய நிலமே வாழ்வாதாரமாக இருந்து வருகிறது. இந்த நிலையில், ஆலங்காயம் பேரூராட்சி சார்பில் அப்பகுதி விவசாய நிலத்தின் அருகே உள்ள அரசுக்கு சொந்தமான இடத்தில் உரக்கிடங்கு அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

விவசாய நிலத்தின் அருகில் உரக்கிடங்கு அமைத்தால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு விவசாயம் பாதிக்கப்படும். இந்தப்பகுதியில் உள்ள கோவில் மற்றும் குடியிருப்பு, பால் பண்ணை பாதிக்கப்படும். எனவே பொதுமக்கள் மற்றும் விவசாயிகளுக்கு எந்த இடைஞ்சலும் ஏற்படாத வகையில் உரக்கிடங்கினை வேறு இடத்தில் ஏற்படுத்த வேண்டும் என திருப்பத்தூர் மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சர் எ.வ.வேலுவிடம் கோரிக்கை மனு அளித்துளளனர். இதுகுறித்து அதிகாரிகளுடன் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் உறுதி அளித்ததாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

இதேபோல் எம்.ல்.ஏ.க்கள் வாணியம்பாடி கோ.செந்தில்குமார், ஜோலார்பேட்டை தொகுதி தேவராஜ் ஆகியோரிடமும் மனு வழங்கினர்.

Tags:    

மேலும் செய்திகள்