தப்பூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தை மாற்ற பொதுமக்கள் எதிர்ப்பு
தப்பூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தை மாற்ற பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து முற்றுகையிட்டனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரை அடுத்த தப்பூரில் இயங்கி வந்த ஊராட்சி மன்ற அலுவலகத்தை, ஊராட்சி மன்ற தலைவர் தங்கள் சொந்த கிராமமான கோவிந்தாங்கலுக்கு மாற்றி ஊராட்சி மன்ற அலுவலகம் கட்ட ஏற்பாடு செய்து வருவதாக கூறப்படுகிறது. இதனை தடுத்து நிறுத்தி ஏற்கனவே இயங்கி வந்த தப்பூர் கிராமத்திலேயே கட்ட வேண்டும் எனக் கூறி மூன்று கிராம மக்கள் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் குமார், தனசேகர் ஆகியோரை முற்றுகையிட்டனர்.
தப்பூர் கிராமத்திலேயே ஊராட்சி நிர்வாகம் இயங்கவும், புதிய கட்டிடம் கட்டவும் நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து கிராம மக்கள் கலைந்து சென்றனர்.