மக்கள் சந்திப்பு இயக்க பிரசாரம்
தூத்துக்குடியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மக்கள் சந்திப்பு இயக்க பிரசாரம் நடந்தது.
தூத்துக்குடி மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மக்கள் சந்திப்பு இயக்க பிரசாரம் நடந்தது. நிகழ்ச்சிக்கு 43-வது வார்டு கிளை செயலாளர் மனோகரன் தலைமை தாங்கினார். மாவட்ட குழு உறுப்பினர் முத்து, பொதுமக்களிடம் துண்டு பிரசுரத்தை வழங்கி பிரசாரத்தை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மத்திய அரசின் பட்ஜெட்டை எதிர்த்து வீடு, வீடாக சென்று பொதுமக்களை சந்தித்து துண்டு பிரசுரம் வழங்கி பிரசாரம் மேற்கொண்டனர்.
நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட செயலாளர் சுரேஷ், மாவட்டக்குழு உறுப்பினர் லட்சுமிநாதன், பெருமாள், மாரியப்பன், மனோஜ், மாரியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.