கள்ளக்குறிச்சியில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

144 தடை உத்தரவு நாளையுடன் முடிவடைகிறது. எனவே கள்ளக்குறிச்சியில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை மறுநாள் முதல் வாரந்தோறும் திங்கட்கிழமை நடக்கிறது.

Update: 2022-07-30 15:23 GMT

கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்று வந்தது. கனியாமூர் பள்ளியில் நடந்த கலவரத்தால் சின்னசேலம் மற்றும் நயினார்பாளையம் குறுவட்டங்களுக்கு உட்பட்ட அனைத்து கிராமங்களிலும் கடந்த 18-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறவில்லை. இந்த நிலையில் 144 தடை உத்தரவு நாளையுடன் (ஞாயிற்றுக்கிழமை) முடிவடைகிறது. எனவே நாளை மறுநாள் முதல் வாரந்தோறும் திங்கட்கிழமை கொரோனா நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறும். இதில் பங்கேற்க வரும் பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடித்து கோரிக்கை மனுக்களை நேரடியாக வழங்கலாம். இவ்வாறு அவரது செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்