கரூர் மாநகராட்சி அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கரூர் மாநகராட்சி அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது.

Update: 2022-06-20 19:29 GMT

கரூர் மாநகராட்சி அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடைபெற்றது. மேயர் கவிதா கணேசன் கலந்து கொண்டு பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். இதில் துணை மேயர் தாரணி சரவணன், மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் மொத்தம் 18 மனுக்கள் பெறப்பட்டன. அவற்றில் பெரும்பாலும் குடிநீர் இணைப்பு, சாலை வசதி, சாக்கடை வசதி, சாலை சீரமைப்பு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கேட்டு மனுக்களை பொதுமக்கள் கொடுத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்