பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம்

விழுப்புரம் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம்

Update: 2023-05-31 18:45 GMT

விழுப்புரம்

விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று வாராந்திர பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங்சாய் தலைமை தாங்கி பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் ஸ்ரீதரன், கோவிந்தராஜ், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் சுவாதி, சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இக்கூட்டத்தில் மனுக்கள் பெறப்பட்டன. இம்மனுக்களை பெற்ற மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங்சாய், இதன் மீது உடனடியாக விசாரணை செய்து வழக்குப்பதிவு செய்ய சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையங்களுக்கு உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்