ஆலங்குடி குருபகவான் கோவிலில் பொதுவிருந்து
சுதந்திர தின விழாவையொட்டி ஆலங்குடி குருபகவான் கோவிலில் பொதுவிருந்து நடந்தது.
நீடாமங்கலம்:
நீடாமங்கலம் அருகே ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு நேற்று பொதுவிருந்து நடந்தது. இதில் இந்துசமய அறநிலையத்துறை உதவி ஆணையர் மற்றும் கோவில் செயல்அலுவலர் நாகையா, கோவில் கண்காணிப்பாளர் அரவிந்தன், தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் அன்பரசன், தெட்சிணாமூர்த்தி, ஊராட்சி மன்றத்தலைவர் மோகன் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.