தொடர் திருட்டு, கொள்ளை சம்பவத்தால் பொதுமக்கள் அச்சம்

பகண்டை கூட்டுரோடு பகுதியில் தொடர் திருட்டு, கொள்ளை சம்பவத்தால் பொதுமக்கள் அச்சம்

Update: 2022-12-19 18:45 GMT

ரிஷிவந்தியம்

வாணாபுரம் அடுத்த பெரியபகண்டை மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் துரைசாமி மனைவி இளவரசி(36). இவர் சம்பவத்தன்று வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தபோது வீட்டின் பின்பக்கம் வழியாக உள்ளே புகுந்த மர்மநபர்கள் இளவரசியின் கழுத்தில் கிடந்த 3 பவுன் சங்கிலியை பறித்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

அதே கிராமத்தில் மாரியம்மன் கோவில் எதிரே வசித்து வரும் லோகநாதன் மகன் சக்திவேல் என்பவரின் வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள் அங்கிருந்த பொருட்களை கலைத்து விட்டு பணம் மற்றும் வெள்ளிப் பொருட்களை திருடிச்சென்றனர். இதே கிராமத்தில் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு மோகன் என்பவர் வீட்டில் பூட்டை உடைத்து 7 பவுன் நகைகளை மர்ம நபா்கள் கொள்ளையடித்து சென்றனர். மேலும் கடந்த மாத இறுதியில் வாணாபுரத்தை சேர்ந்த கருணாமூர்த்தி, ராஜேந்திரன், செல்வராஜ் ஆகியோரது வீடுகளில் திருட்டு சம்பவம் நடந்துள்ளது. அடுத்தடுத்து நடந்த திருட்டு மற்றும் கொள்ளை சம்பவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இது குறித்து பொதுமக்கள் கூறும்போது, பகண்டை கூட்ரோடு சுற்று வட்டார பகுதியில் பூட்டிய வீடுகளை மர்ம நபர்கள் நோட்டமிட்டு கைவரிசை காட்டி வருவதாகவும், இதை தடுக்க இரவு நேர ரோந்து காவலை போலீசார் தீவிரப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்