குடிநீர் கேட்டு பொதுமக்கள் தொடர் உண்ணாவிரதம்

வடக்கு விஜயநாராயணத்தில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Update: 2023-03-15 20:32 GMT

இட்டமொழி:

வடக்கு விஜயநாராயணத்தில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

குடிநீர் தட்டுப்பாடு

நாங்குநேரி யூனியன் வடக்கு விஜயநாராயணத்தில் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் தெற்கு விஜயநாராயணம் ஐ.என்.எஸ். கட்டபொம்மன் கடற்படைத்தளம் அருகே அமைந்துள்ள நீரேற்று நிலையம் மூலம் குழாய் வழியாக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் குடிதண்ணீர் ஏற்றப்பட்டு வீடுகளுக்கு வழங்கப்பட்டு வந்தது.

தற்போது கடந்த சில மாதங்களாக குடிநீர் குழாய் சிதிலம் அடைந்து இருப்பதாக கூறி வீடுகளுக்கு சரிவர குடிநீர் கிடைக்காத நிலை உள்ளது. இதனால் வடக்கு விஜயநாராயணத்தில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது.

உண்ணாவிரதம்

இந்நிலையில் நேற்று விஜயநாராயணம் கிராம சமூக ஆர்வலர் நலச்சங்கம் சார்பில் அங்குள்ள வருவாய் ஆய்வாளர் அலுவலகம் எதிரே தொடர் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. போராட்டத்துக்கு சங்கத்தலைவர் முருகன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் முத்துசாமி, ராஜகோபால் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

தகவல் அறிந்ததும் திசையன்விளை தாசில்தார் ராஜேந்திரன், நாங்குநேரி வட்டார வளர்ச்சி அலுவலர் கிஷோர்குமார், போலீஸ் இன்ஸ்பெக்டர் நாககுமாரி, வருவாய் ஆய்வாளர் ராணி, கிராம நிர்வாக அலுவலர் கணேஷ் ஆகியோர் அங்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால் முடிவு ஏதும் எட்டப்படாததால் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்