பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டை

கவசம்பட்டு கிராமத்தில் பொதுவினியோக திட்ட சிறப்பு குறைதீர்வு முகாம் நடைபெற்றது.

Update: 2022-09-10 11:19 GMT

பொது வினியோக திட்டத்தின் சேவைகள் அனைத்து மக்களுக்கும் வழங்கும் பொருட்டு வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் பொதுவினியோக திட்ட சிறப்பு குறைதீர்வு முகாம் நடைபெற்றது. கே.வி.குப்பம் அடுத்த கவசம்பட்டில் இதற்கான முகாம் நடைபெற்றது. வட்ட வழங்கல் அலுவலர் மகேஸ்வரி தலைமை தாங்கினார். குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம், புதிய அட்டைகளுக்கு விண்ணப்பித்தல் உள்ளிட்டவை சார்ந்த 54 மனுக்கள் பெறப்பட்டன.

ஏற்கனவே பெறப்பட்ட மனுக்கள் மீது பரிசீலனை செய்து முகாமில் 3 புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டது. வருவாய் ஆய்வாளர் கண்ணன், கிராம நிர்வாக அலுவலர் அகிலா உள்பட பலர் கலந்து கொண்டனர். கிராம உதவியாளர் ரேவதி நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்