பொது வினியோக திட்ட குறைதீர்க்கும் முகாம்
கடக்கம் ஊராட்சியில் பொது வினியோக திட்ட குறைதீர்க்கும் முகாம் நடந்தது
பொறையாறு:
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா பொறையாறு அருகே கடக்கம் ஊராட்சியில் உணவுப் பொருள் வழங்கல், மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு, தரங்கம்பாடி தாலுகா வட்ட வழங்கல் துறையின் சார்பில் பொது வினியோக திட்ட மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடந்தது. முகாமிற்கு தரங்கம்பாடி தாலுகா வட்ட வழங்கல் அலுவலர் விஜயகுமார் தலைமை தாங்கினார். வட்ட வழங்கல் துறை ஆய்வாளர் மரியஜோசப் ராஜ் முன்னிலை வகித்தார். ஊராட்சி மன்ற தலைவர் சதீஷ் வரவேற்றார். முகாமில் குடும்ப அட்டையில் பெயர் நீக்குதல், பெயர் சேர்த்தல், முகவரி மாற்றம், செல்போன் எண் மாற்றம் ஆகியன தொடர்பாக 52 மனுக்கள் பெறப்பட்டன. இதில் ஊராட்சி துணைத் தலைவர் கஞ்சமலை, அங்காடி விற்பனையாளர் ஆனந்தி, ஊராட்சி உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.