பொதுவினியோக திட்ட குறைதீர் முகாம்

திருக்கோவிலூர் தாலுகா அலுவலகத்தில் பொதுவினியோக திட்ட குறைதீர் முகாம் இன்று நடக்கிறது

Update: 2023-07-07 18:45 GMT

திருக்கோவிலூர்

திருக்கோவிலூர் தாலுகா அலுவலகத்தில் உள்ள வட்ட வழங்கல் அலுவலகத்தில் பொதுவினியோக திட்ட குறைதீர் முகாம் இன்று(சனிக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற உள்ளது. இந்த முகாமில் திருக்கோவிலூர் தாலுகாவில் வசிக்கும் குடும்ப அட்டைதாரர்கள் முகவரி மாற்றம், பெயர் திருத்தம், பெயர் சேர்த்தல் மற்றும் நீக்குதல், செல்போன் எண் இணைத்தல், புகைப்படம் பதிவேற்றம் செய்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற உள்ளதால் திருத்தம் செய்ய வேண்டிய பணிகளை தேவையான ஆவணங்களுடன் நேரில் வந்து சரி செய்து கொள்ளலாம். மேற்கண்டவாறு திருக்கோவிலூர் வட்ட வழங்கல் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்