பொது வினியோக திட்ட குறைதீர்க்கும் முகாம்- நாளை நடக்கிறது

தாலுகா அலுவலகங்களில் பொது வினியோக திட்ட குறைதீர்க்கும் முகாம் நாளை நடக்கிறது.

Update: 2023-07-06 20:04 GMT

நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகா அலுவலகங்களில் பொது வினியோக திட்ட குறைதீர்க்கும் முகாம் நாளை (சனிக்கிழமை) நடைபெறுகிறது. முகாமில் புதிதாக குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை கோரி விண்ணப்பிக்கலாம். மேலும் குடும்ப அட்டையில் செல்போன் எண் பதிவு செய்தல், மாற்றம் செய்யலாம். இவற்றுக்கு தேவையான ஆதார் கார்டு மற்றும் குடியிருப்பு முகவரிக்கு தேவையான ஆவணங்கள் மற்றும் பிறப்பு-இறப்பு சான்றிதழில் தேவையானவற்றை கொண்டு செல்ல வேண்டும்.

இதுதவிர ரேஷன் கடைகளின் செயல்பாடுகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் தரம் குறித்து புகார் அளிக்கலாம். தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் மற்றும் சேவை குறைபாடுகள் குறித்தும் புகார் அளிக்கலாம்.

பொது வினியோக திட்ட செயல்பாடுகள் குறித்த புகார்களுக்கு 9342471314 என்ற நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலக பொது வினியோக திட்ட கட்டுப்பாட்டு அறை எண்ணுக்கு தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.

இந்த தகவலை நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் தெரிவித்து உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்