பொது வினியோக திட்ட ஆலோசனை கூட்டம்
சாத்தூரில் பொது வினியோக திட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
சாத்தூர்,
சாத்தூரில் பொது வினியோகத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு வருவாய் கோட்டாட்சியர் அனிதா தலைமை வகித்தார். சாத்தூர் எம்.எல்.ஏ. ரகுராமன் முன்னிலை வகித்தார். இதில் வட்டாட்சியர் வெங்கடேஷ், வட்ட வழங்கல் அலுவலர் ராஜாமணி ஆகியோர் கலந்து கொண்டு ரேசன் பொருட்களை முறையாக வினியோகம் செய்வது குறித்தும், வினியோகம் செய்யப்படும் பொருட்கள் மக்களை முறையாக சென்று அடைவதை குறித்தும் கண்காணிப்பு குழுக்கள் மூலம் கண்காணிக்கவும் ஆலோசனை நடைபெற்றது. இதில் ஊராட்சி ஒன்றிய துணைச்சேர்மன் செல்லத்தாய் குணசேகரன், ம.தி.மு.க. ஒன்றிய செயலாளர் குணசேகரன், பாலகிருஷ்ணன், வட்டார வழங்கல் அலுவலர்கள், கூட்டுறவு சார்பதிவாளர், கண்காணிப்பு குழு உறுப்பினர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.