வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி விருத்தாசலம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் தர்ணா

வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி விருத்தாசலம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Update: 2023-10-11 18:45 GMT

விருத்தாசலம், 

விருத்தாசலம் பகுதிக்குட்பட்ட டி.வி.புத்தூர், சின்னகண்டியாங்குப்பம், அண்ணாநகர், செல்வராஜ்நகர், கஸ்பா தெரு, பெண்ணாடம் ரோடு, பூதாமூர் உள்ளிட்ட பகுதிகளில் வாழும் தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கக்கோரி அப்பகுதி மக்கள் அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்து வந்தனர். இருப்பினும் பட்டா வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தெரிகிறது.

இந்த நிலையில் இந்திய ஐக்கிய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் அதன் மாவட்ட செயலாளர் கோகுலகிறிஸ்டீபன் தலைமையில் பொதுமக்கள் விருத்தாசலம் பாலக்கரையில் இருந்து கோட்டாட்சியர் அலுவலகம் வரை ஊர்வலமாக சென்றனர். தொடர்ந்து கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் செந்தில்குமாரை சந்தித்து கோரிக்கை மனுக்களை அளித்தனர். மனுக்களை பெற்றுக்கொண்ட அவர் நடவடிக்கை எடுப்பதாக கூறினார். இதையேற்ற பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்