அகரம்சேரி பாலாற்றின் குறுக்கே பாலம் கட்ட வேண்டும்வில்வநாதன் எம்.எல்.ஏ.விடம் பொதுமக்கள் கோரிக்கை

அகரம்சேரி பாலாற்றின் குறுக்கே பாலம் கட்ட வேண்டும் என வில்வநாதன் எம்.எல்.ஏ.விடம் பொதுமக்கள் வலியுறுத்தினர்.

Update: 2022-08-27 18:33 GMT

அணைக்கட்டு

அகரம்சேரி பாலாற்றின் குறுக்கே பாலம் கட்ட வேண்டும் என வில்வநாதன் எம்.எல்.ஏ.விடம் பொதுமக்கள் வலியுறுத்தினர்.

தமிழகம் முழுவதும் உள்ள சட்டமன்ற தொகுதிகளில் தீர்க்கப்படாத 10 கோரிக்கைகளை தொகுதி எம்.எல்.ஏ.க்கள் 15 நாட்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி ஆம்பூர் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. வில்வநாதன் அவரது தொகுதிக்கு உட்பட்ட அகரம் சேரி, கூத்தம்பாக்கம், பள்ளிக்குப்பம், கொல்லமங்கலம், சின்னசேரி ஆகிய ஊராட்சிகளில் பிரதான கோரிக்கைகளை தொகுதி மக்களிடத்தில் பெறும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.

அகரம் சேரியில் நடந்த நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் வச்சலா ராஜ்குமார், ஒன்றியக் குழு தலைவர் நித்யானந்தம், ஒன்றிய குழு உறுப்பினர்கள் ஆனந்தி நித்தியானந்தம், மனோஜ், ஒன்றிய செயலாளர் பிரதிஷ், மாவட்ட கவுன்சிலர் ஆனந்தி முருகானந்தம் மற்றும் மேலாளத்தூர், கொத்தகுப்பம், அனங்காநல்லூர் உள்ளிட்ட 15 ஊராட்சி பொதுமக்களின் சார்பாக ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதனிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். இந்த நிகழ்சியில் குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் தனஞ்செழியன், குடியாத்தம் தாசில்தார் விஜயகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கார்த்திகேயன், சாந்தி, வருவாய் ஆய்வாளர் சுகந்தி பொதுப்பணித்துறை மற்றும் நீர்வளத்துறை மற்றும் அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.

இது குறித்து வில்வநாதன் எம்.எல்.ஏ. கூறுகையில், ''சட்டமன்ற தொகுதியில் 10 கோரிக்கையில் முதல் கோரிக்கையாக அகரம் சேரி பாலாற்றின் குறுக்கே பாலம் கட்டித் தர வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைக்கிறேன். என்னால் முடிந்த அளவிற்கு பாலம் கட்டுவதற்கான முயற்சியை மேற்கொள்வேன்'' என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்