தர்மபுரியில் தீபாவளி சீட்டு மோசடி குறித்து பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம்-பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அறிவிப்பு

தர்மபுரியில் தீபாவளி சீட்டு மோசடி குறித்து பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம் என்று பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அறிவித்துள்ளனர்.

Update: 2022-12-27 18:45 GMT

தீபாவளி சீட்டு

தர்மபுரி மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

தர்மபுரி மாவட்டம் ஈச்சம்பட்டி கிராமத்தை சேர்ந்த சிவக்குமார். இவர் தர்மபுரி சீனிவாசா தெருவில் தீபாவளி சீட்டு நடத்தி பொதுமக்கள் பலரிடம் பணத்தை வசூல் செய்து திருப்பி தராமல் ஏமாற்றி மோசடி செய்ததாக அதியமான்கோட்டை போலீஸ் நிலையத்தில் மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டு தற்போது புலன் விசாரணையில் உள்ளது.

புகார் தெரிவிக்கலாம்

எனவே சிவக்குமாரிடம் தீபாவளி சீட்டு பணம் கட்டி பாதிக்கப்பட்டவர்கள் யாராவது இருந்தால் தர்மபுரி ஒட்டப்பட்டியில் செயல்படும் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ்அலுவலகத்தில் தங்கள் வசம் உள்ள அசல் ஆவணங்கள், அசல் சீட்டு மற்றும் அட்டை ஆகியவற்றுடன் எழுத்துப்பூர்வமாக புகார் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்