காவிரி குடிநீர் ேகட்டு பொதுமக்கள் சாலை மறியல்

காவிரி குடிநீர் ேகட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2022-10-27 20:55 GMT

திருவெறும்பூர்:

காவிரி குடிநீர் வரவில்லை

துவாக்குடி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக காவிரி குடிநீர் வரத்து மிகவும் குறைவாக இருந்துள்ளது. மேலும் ஒரு சில பகுதிகளில் காவிரி குடிநீர் முழுமையாக வருவதில்லை என்று கூறி கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பொதுமக்கள் சாலை மறியல் ஈடுபட்டனர்.

இந்நிலையில் அண்ணா வளைவு வடக்குமலை பகுதியை சேர்ந்த கருமாரி தெரு, பாரதிதாசன் தெரு, ஜீவானந்தம் தெரு என 25 தெருக்கள் உள்ளன. இந்த தெருக்களில் கடந்த 15 நாட்களாக சரியாக காவிரி குடிநீர் வருவதில்லை என்றும், ஜீவானந்தம் தெருவில் கடந்த 15 நாட்களாக முழுமையாகவே காவிரி குடிநீருக்கு தட்டுப்பாடு இருந்து வருவதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

சாலை மறியல்

இந்நிலையில் காவிரி குடிநீர் வராததை கண்டித்து அப்பகுதி மக்கள் நேற்று இரவு திருச்சி-தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது பற்றி தகவல் அறிந்து விரைந்து வந்த துவாக்குடி போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் பேச்சுவார்த்தை நடத்தி பொதுமக்களை சமாதானம் செய்தனர். இதையடுத்து அப்பகுதி கவுன்சிலர் அங்கு வரவில்லை என்று பொதுமக்கள் குற்றம்சாட்டியபடி அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்