பொதுமக்களுக்கு நிதிக்கல்வி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

பொதுமக்களுக்கு நிதிக்கல்வி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2023-08-23 18:19 GMT

காட்பாடியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் கிராம மக்களுக்கு நிதி கல்வி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

சிறப்பு விருந்தினராக தேசிய நிதி கல்வி பயிற்சியாளர் ஜெயபாலன் கலந்துகொண்டு, குடும்ப வருமானத்தில் எவ்வாறு பட்ஜெட் போட வேண்டும், சேமிப்பு எவ்வாறு மேற்கொள்ள வேண்டும், முதலீடுகள், காப்பீடு, ஓய்வூதிய திட்டங்கள் குறித்து விளக்கி கூறினார்.

மேலும் பொதுமக்கள் மோசடியில் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றும் விரிவாக எடுத்துக் கூறினார்.

இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை பேராசிரியை காயத்திரி செய்திருந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்