மனச்சிதைவு நோய் விழிப்புணர்வு உறுதிமொழி

சந்திராபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியர்கள் மற்றும் ஊழியர்கள் மனச்சிதைவு நோய் விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்

Update: 2022-06-04 16:02 GMT

சுல்தான்பேட்டை

சுல்தான்பேட்டை ஊராட்சி ஒன்றியம் வா.சந்திராபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மனச்சிதைவு நோய் விழிப்பு ணர்வு உறுதிமொழி ஏற்பு நடந்தது.

இதற்கு டாக்டர் சுந்தர் தலைமை வகித்தார். இதில் செவிலியர்கள் மற்றும் ஊழியர்கள் விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

அதில், மனநலம் என்பது ஒருவரின் அடிப்படை வாழ்வுரிமை. அதை உணர்ந்து வாழ்வில் மட்டுமல்லாது, சமூகத்திலும் நிலை நாட்ட பாடுபட வேண்டும். மனநல பிணியாளருக்கு இயன்ற உதவியையும், பாதுகாப்பையும் அளிப்பேன்.

மேலும் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவோம். மனச்சிதைவு நோய்க்கான அவசர சிகிச்சை, தொடர் சிகிச்சை அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படுவது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று உறுதிமொழி எடுத்து கொண்டனர். முடிவில், சுகாதார ஆய்வாளர் ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்