நமக்கு நாமே திட்டத்தின் கீழ் பொதுமக்களின் பங்களிப்பாக ரூ.2¾ லட்சம் வழங்கல்

நமக்கு நாமே திட்டத்தின் கீழ் பொதுமக்களின் பங்களிப்பாக ரூ.2¾ லட்சம் வழங்கப்பட்டது.

Update: 2023-08-03 19:02 GMT

வேட்டமங்கலம் ஊராட்சியில் நமக்கு நாமே திட்டத்தில் குறுக்குச்சாலை பிகேஎஸ் நகரில் ஒரு லட்சத்து 50 ஆயிரம் லிட்டர் குடிநீர் கொள்ளளவு கொண்ட சம்பை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்காக மின் மோட்டார், மின் மோட்டார் அறை மற்றும் மின்சார இணைப்பு, கம்பி வேலி அமைத்தல் பணிக்கு திட்ட மதிப்பீடு ரூ.8 லட்சத்து 80 ஆயிரம் ஆகும். அதில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் பொதுமக்களின் பங்களிப்புத் தொகையாக புகழூர் நகராட்சி தலைவர் சேகர் என்கிற குணசேகரன் சார்பில் ரூ.50 ஆயிரமும், பங்களா நகர், குறுக்குச்சாலை பொதுமக்கள் சார்பில் தலா ரூ.50 ஆயிரமும், அண்ணா நகர், கணபதி நகர், வெள்ளியம்பாளையம் பொதுமக்கள் சார்பில் தலா ரூ.25 ஆயிரமும், வேட்டமங்கலம் ஊராட்சி தலைவர் ராமச்சந்திரன் சார்பில் ரூ.73 ஆயிரத்து 334-ம், வசூல் செய்யப்பட்டு அதற்கான வரைவோலை காசோலையை வேட்டமங்கலம் ஊராட்சி நிர்வாகத்திடம் வழங்கும் நிகழ்ச்சி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் புகழூர் நகராட்சி தலைவர் சேகர் என்கிற குணசேகரன் தலைமையிலான பொதுமக்கள் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் குடிநீர் வினியோகத்திற்கான பல்வேறு திட்டப் பணிகளுக்காக பொதுமக்களின் பங்கு தொகையான ரூ.2 லட்சத்து 93 ஆயிரத்து 334 -க்கான வரைவோலை காசோலையை ஊராட்சி தலைவர் ராமச்சந்திரன், துணைத் தலைவர் சோமசுந்தரத்திடம் வழங்கினர்.

Tags:    

மேலும் செய்திகள்