கேம்பலாபாத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்
Collector Senthilraj distributed welfare assistance to the beneficiaries in a public relations camp at Kampalabad.
தென்திருப்பேரை:
ஆழ்வார்திருநகரி அருகே உள்ள திருக்களூர் ஊராட்சி கேம்பலாபாத்தில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. இம்முகாமினை மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தொடங்கி வைத்தார். முகாமில், மருத்துவ துறை, வேளாண்மை பொறியியல் துறை, வேளாண்மை உழவர் நலத்துறை, தோட்ட பயிர்கள் மற்றும் மலைப்பயிர்கள் துறை, கால்நடை பராமரிப்புத்துறை உள்ளிட்ட பல்வேறு துறையினர் சிறப்பு ஸ்டால்கள் மூலம் தங்களது துறை சார்ந்த திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு விளக்கம் அளித்தனர். மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, மாவட்ட தொழில் மையம் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை, கூட்டுறவு துறை வருவாய்த்துறை மகளிர் திட்டம் உள்ளிட்ட அரசு துறைகள் மூலம் ரூ.54 ஆயிரத்து 81 ஆயிரம் மதிப்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் கேம்பலாபாத் பஞ்சாயத்து தலைவர் சபிதா சர்மிளா, துணை தலைவர் ஹாஜா உதுமான், திருச்செந்தூர் உதவி கலெக்டர் புகாரி, ஏரல் தாசில்தார் கண்ணன், தாலுகா வழங்கல் அலுவலர் முரளிதரன், ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாலசுப்பிரமணியன் கருப்பசாமி, கால்நடை இணை இயக்குனர் ராஜன், சுகாதார பணிகள் மாவட்ட துணை இயக்குனர் பொற்செல்வன், மாவட்ட புகையிலை தடுப்பு பணி அலுவலர் வேனுகா, ஆழ்வார் திருநகரி வட்டார வேளாண் உதவி இயக்குனர் அல்லிராணி, தென்திருப்பேரை ஆரம்ப சுகாதார நிலையம் டாக்டர் பார்த்தீபன், வட்டார சுகாதார ஆய்வாளர் முருகேசன், மருத்துவ அலுவலர் முல்லை பாண்டியன், மகளிர் திட்டம் உதவி திட்ட அலுவலர் பாலசுந்தரம் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.