வருங்கால வைப்புநிதி குறைதீர்வு கூட்டம்

திருப்பத்தூர் உள்பட 4 மாவட்டங்களில் வருங்கால வைப்புநிதி குறைதீர்வு கூட்டம் இன்று நடக்கிறது.

Update: 2023-03-26 18:14 GMT

மத்திய தொழிலாளர் அமைச்சகம் அனைத்து மாவட்டங்களிலும் வருங்கால வைப்புநிதி உங்கள் அருகில்-2.0 நிகழ்ச்சியை ஒவ்வொரு மாதமும் 27-ந் தேதி நடத்த முடிவு செய்துள்ளது. இந்த திட்டம் வருங்கால வைப்புநிதி உறுப்பினர்கள், தொழிலதிபர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் ஆகியோரின் குறைதீர்வு கூட்டம் மற்றும் சேவை வழங்கும் தளமாகவும், தகவல் பரிமாற்ற அமைப்பாகவும் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டது. அதன்படி வருங்கால வைப்புநிதி உங்கள் அருகில் 2.0 நிகழ்ச்சி வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் இன்று (திங்கட்கிழமை) காலை 9 முதல் மாலை 5.45 மணி வரை நடைபெற உள்ளது. வேலூர் மாவட்டத்தில் ஆவாரம்பாளையம் தொழிலாளர்துறை அலுவலகம், ராணிப்பேட்டை மாவட்டத்தில் வன்னிவேடு தோல்தொழிற்சாலை கழிவுநீர் சுத்திகரிப்பு லிமிடெட், திருப்பத்தூர் மாவட்டத்தில் வாணியம்பாடி வாணிடெக் பிரைவேட் லிமிடெட், திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலை அருணை மருத்துவக்கல்லூரி ஆகிய இடங்களில் நடைபெறுகிறது.

இதில் வருங்கால வைப்புநிதி உறுப்பினர்கள், ஓய்வூதியம் பெறுவோர், தொழிலதிபர்கள், அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்கள் கலந்து கொண்டு தங்களது குறைகள், கோரிக்கைகளை தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளலாம். மேலும் வைப்புநிதி திட்டங்களின் பயன்களையும் பெற்று கொள்ளலாம்.

இந்த தகவலை வேலூர் மண்டல வருங்கால வைப்புநிதி கமிஷனர் ரிதுராஜ்மேதி தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்