வருங்கால வைப்புநிதி குறைதீர்க்கும் கூட்டம்

நெல்லையில் வருங்கால வைப்புநிதி குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 27-ந்தேதி நடக்கிறது.

Update: 2023-01-20 20:12 GMT

வருங்கால வைப்பு நிதி நிறுவனம் ஒவ்வொரு மாதமும் 10-ந்தேதி 'வருங்கால வைப்புநிதி உங்கள் அருகில்' என்ற பெயரில் வருங்கால வைப்புநிதி குறைதீர்க்கும் கூட்டத்தை நடத்தி வந்தது. அதில் வருங்கால வைப்பு நிதி உறுப்பினர்கள், தொழில் அதிபர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் ஆகியோரின் குறைகள் பெறப்பட்டு நிவர்த்தி செய்யப்பட்டன.

தற்போது ஒவ்வொரு மாதமும் 27-ந்தேதி அனைத்து மாவட்டங்களிலும் 'வருங்கால வைப்புநிதி உங்கள் அருகில் 2.0' என்ற பெயரில் குறைதீர்க்கும் கூட்டத்தை நடத்த மத்திய தொழிலாளர் அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இத்திட்டம் வருங்கால வைப்புநிதி உறுப்பினர்கள், தொழிலதிபர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் ஆகியோரின் குறைதீர்க்கும் முகாம் மற்றும் சேவை வழங்கும் தளமாகவும், தகவல் பரிமாற்ற அமைப்பாகவும் செயல்படும்.

'வருங்கால வைப்புநிதி உங்கள் அருகில் 2.0' நிகழ்ச்சியானது நெல்லை, தென்காசி, தூத்துக்குடி ஆகிய 3 மாவட்டங்களில் வருகிற 27-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 9 மணி முதல் கீழ்கண்ட இடங்களில் நடத்தப்படுகிறது.

அதன்படி நெல்லை மாவட்டத்துக்கு நெல்லை மாநகராட்சி அலுவலக கூட்ட அரங்கிலும், தென்காசி மாவட்டத்துக்கு தென்காசி குத்துக்கல்வலசையைில் உள்ள மாவட்ட தொழில் மையத்திலும், தூத்துக்குடி மாவட்டத்துக்கு தூத்துக்குடி சோரீஸ்புரம் ஐ.டி.ஐ. வளாக முதல் தளத்தில் உள்ள ஒருங்கிணைந்த தொழிலாளர் துறை அலுவலகத்திலும் நடைபெறும்.

இதில் வருங்கால வைப்புநிதி உறுப்பினர்கள், ஓய்வூதியம் பெறுவோர், தொழிலதிபர்கள், அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்கள், தொழில் நிறுவன அமைப்புகள் கலந்து கொண்டு தங்களது குறைகளை நிவர்த்தி செய்து கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

இந்த தகவலை வருங்கால வைப்பு நிதி ஆணையாளர் விகாஸ் குமார் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்