தரமான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும்

துப்புரவு பணியாளர்களுக்கு தரமான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும் என அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தினர் வலியுறுத்தி உள்ளனர்.

Update: 2023-08-10 18:45 GMT

தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின் 7-வது மாவட்ட பேரவைக்கூட்டம் விழுப்புரத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் பொன்முடி தலைமை தாங்கினார். துணைத்தலைவர் கிருஷ்ணமூர்த்தி அனைவரையும் வரவேற்றார். துணைத்தலைவர் குமாரதாஸ் முன்னிலை வகித்தார். போக்குவரத்துத்துறை மாநில பொதுச்செயலாளர் மூர்த்தி தொடக்க உரையாற்றினார். மாவட்ட பொருளாளர் ரத்தினம், வரவு- செலவு அறிக்கையை சமர்ப்பித்தார். சங்கத்தின் மாநில துணைத்தலைவர் இளமாறன் நிறைவுரையாற்றினார். இக்கூட்டத்தில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், மருத்துவ காப்பீடு திட்டத்தில் அரசு மருத்துவமனையில் அனைத்து வகையான நோய்களுக்கும் மருத்துவம் பார்க்க வேண்டும், துப்புரவு பணியாளர்களுக்கு கையுறை உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களை தரமான பொருட்களாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் நிர்வாகிகள் ராமச்சந்திரன், அறவாழி, பார்த்திபன், கமலா, திருநாவுக்கரசு, லோகநாதன், மோகன், ரவீந்திரன் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் விழுப்புரம் வட்ட செயலாளர் ராஜரத்தினம் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்