"சரியான எடையில் தரமான பொருட்கள் வழங்குக": நியாய விலைக் கடை ஊழியர்கள் போராட்டம்

பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நியாயவிலைக்கடை ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-06-07 18:43 GMT

நெல்லை,

அகவிலைப்படி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நியாய விலைக்கடை ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரிசி உள்ளிட்ட பொருட்களை பேக்கிங் முறையில் வழங்க வேண்டும், ஊழியர்களின் நிதி பயன்களை வங்கியின் மூலம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தினர்.

அதே போல் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவண்ணாமலை ஆட்சியர் அலுவலகம் முன்பு நியாயவிலைக்கடை ஊழியர்கள் போராட்டம் நடத்தினர். 31 சதவீத அகவிலைப்படியை வழங்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மூன்று நாட்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 380 க்கும் மேற்பட்ட நியாயவிலைக்கடை ஊழியர்கள் பங்கேற்றனர்.

திருவாரூர் ஆட்சியர் அலுவலகம் முன்பும் 50 க்கும் மேற்பட்ட நியாயவிலைக்கடை ஊழியர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது 31 சதவீத அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும், சரியான எடையில் தரமான பொட்டலங்களை வழங்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை அவர்கள் வலியுறுத்தினர்.  

Tags:    

மேலும் செய்திகள்