விவசாய நிலங்கள் கையகப்படுத்துவதை கண்டித்து பா.ம.க.வினர் சாலை மறியல்

விவசாய நிலங்கள் கையகப்படுத்துவதை கண்டித்து பா.ம.க.வினர் சாலை மறியல் நடந்தது.

Update: 2023-07-26 20:14 GMT

நெய்வேலியில் என்.எல்.சி. விரிவாக்க பணிகளுக்காக விவசாய நிலங்கள் கையகப்படுத்துவதை கண்டித்து கும்பகோணம்-சென்னை நெடுஞ்சாலை அணைக்கரையில் பா.ம.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதற்கு உழவர் பேரியக்க மாநில தலைவர் ஆலயமணி தலைமை தாங்கினார். பா.ம.க. மாவட்ட தலைவர் அமிர்தகண்ணன் மற்றும் வன்னியர் சங்க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் அரை மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்