மீன்துறை டோக்கன் அலுவலகத்தில் மீனவர்கள் முற்றுகை
மீன்துறை டோக்கன் அலுவலகத்தில் மீனவர்கள் முற்றுகையிட்டனர்.
ராமேசுவரம்,
ராமேசுவரம் துறைமுக பகுதியில் உள்ள மீன் துறை டோக்கன் அலுவலகம் முன்பு நேற்று ஏராளமான மீனவர்கள் முற்றுகையிட்டனர். 18 பைபர் படகுகளுக்கு மட்டும் மீன்பிடிக்க அனுமதி வழங்கி உள்ள நிலையில் 4 பைபர் படகுகளுக்கு மட்டும் அனுமதி வழங்காத மீன்துறை அதிகாரிகளை கண்டித்து 50-க்கும் மேற்பட்ட மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் நடத்திய மீனவர்களுடன் மீன் துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதை தொடர்ந்து போராட்டம் நடத்திய மீனவர்கள் அனைவரும் அமைதியாக கலைந்து சென்றனர்.