கவர்னருக்கு திருக்குறள் புத்தகம் அனுப்பும் போராட்டம்

கவர்னருக்கு திருக்குறள் புத்தகம் அனுப்பும் போராட்டம் நடந்தது.

Update: 2022-10-08 20:50 GMT

திருச்சி தலைமை தபால் நிலையத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் தமிழக கவர்னருக்கு திருக்குறள் புத்தகம் அனுப்பும் போராட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் சேதுபதி தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் லெனின் முன்னிலை வகித்தார். இதில் திருக்குறள் மொழி பெயர்க்கப்பட்டபோது ஆன்மிக கருத்துகள் மறைக்கப்பட்டுள்ளதாக கவர்னர் தெரிவித்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அவருக்கு திருக்குறள் புத்தகம் அனுப்பி வைக்கப்பட்டது. சங்க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்