மயிலாப்பூர் கோவிலை பக்தர்களின் கட்டுப்பாட்டில் ஒப்படைக்கக் கோரி போராட்டம் - பாஜக கவுன்சிலர் உட்பட 75 பேர் மீது வழக்குப்பதிவு

மயிலாப்பூர் கோவிலை பக்தர்களின் கட்டுப்பாட்டில் ஒப்படைக்கக் கோரி போராட்டம் நடத்திய பாஜக கவுன்சிலர் உட்பட 75 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2022-09-18 17:02 GMT

மயிலாப்பூர்,

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலை பக்தர்களின் கட்டுப்பாட்டில் ஒப்படைக்கக் கோரி போராட்டம் நடத்தியதாக பாஜக கவுன்சிலர் உட்பட 75 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

விநாயகர் சதுர்த்தி அன்று கபாலீஸ்வரர் கோவிலுக்கு சென்ற பாஜக கவுன்சிலர் உமா ஆனந்தன், இந்து தமிழர் கட்சியின் தலைவர் ரவி உள்ளிட்டோர், கோவிலை பக்தர்களின் கட்டுப்பாட்டில் ஒப்படைக்கக் கோரி போராட்டம் நடத்தியதாக தெரிகிறது.

இது தொடர்பான விசாரணை மேற்கொண்ட மயிலாப்பூர் போலீசார், உமா ஆனந்தன், வக்கீல் வெங்கடேஷ் உட்பட 75 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்