புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் -ஜாக்டோ-ஜியோ அமைப்பு முடிவு

புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி வருகிற 5-ந்தேதி கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த ஜாக்டோ-ஜியோ அமைப்பு முடிவு செய்துள்ளது.

Update: 2023-01-02 20:08 GMT


புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி வருகிற 5-ந்தேதி கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த ஜாக்டோ-ஜியோ அமைப்பு முடிவு செய்துள்ளது.

கூட்டம்

ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ மாவட்ட உயர்மட்டக்குழு கூட்டம் சிவகங்கையில் நடைபெற்றது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் முத்துப்பாண்டி யன், முத்துச்சாமி, ராதாகிருஷ்ணன் ஆகியோர் கூட்டு தலைமை வகித்தனர். மாநில முடிவுகளை மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர் இளங்கோவன் எடுத்துக் கூறினார்.

தீர்மானம்

கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்தல், தொகுப்பு ஊதியத்தை ஒழித்தல், ஊதிய முரண்பாட்டை களைதல், அகவிலைப்படி உயர்வு வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 5-ந்தேதி மாலையில் சிவகங்கை கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் உறுப்பு சங்கங்களின் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்