ஒப்பந்த அடிப்படையில் நியமித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து விரைவில் போராட்டம்

தனியார் பஸ் டிரைவர்களை ஒப்பந்த அடிப்படையில் நியமித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து விரைவில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என்று அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் ஆர்.கமலக்கண்ணன் பேசினார்.

Update: 2023-07-07 16:32 GMT


தனியார் பஸ் டிரைவர்களை ஒப்பந்த அடிப்படையில் நியமித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து விரைவில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என்று அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் ஆர்.கமலக்கண்ணன் பேசினார்.

கைெகடிகாரம் வழங்கும் நிகழச்சி

திருவண்ணாமலை வேங்கிக்காலில் உள்ள தெற்கு மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் பல்வேறு கட்ட போராட்டங்களில் பங்கேற்ற தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தெற்கு மண்டலத்திற்கு உட்பட்ட அண்ணா தொழிற்சங்க உறுப்பினர்களுக்கு ஜெயலலிதா உருவ பொறித்த கைெகடிகாரம் வழங்கும் நிகழ்ச்சி தெற்கு மண்டல அண்ணா தொழிற்சங்கம் சார்பில் இன்று நடைபெற்றது.

தெற்கு மாவட்ட செயலாளர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். அண்ணா தொழிற்சங்க பேரவை மாநில தலைவர் தாடி ம.ராசு முன்னிலை வகித்தார்.

சிறப்பு அழைப்பாளராக அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் ஆர்.கமலக்கண்ணன் கலந்து கொண்டு மாவட்டத்தில் உள்ள 10 பணிமனையில் உள்ள அண்ணா தொழிற்சங்க உறுப்பினர்கள் 480 பேருக்கு கைெகடிகாரங்களை வழங்கினார்.

தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

கடந்த 29.5.2023 அன்று தி.மு.க. அரசு 530 தனியார் பஸ் டிரைவர்களை ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பதாக அறிவித்தவுடன் தொ.மு.ச. மற்றும் 8 தொற்சங்கங்கள் இணைந்து மக்களின் நலனை எண்ணி பார்க்காமல் உடனடியாக வேலை நிறுத்தத்தை செய்தனர்.

விரைவில் மிகப்பெரிய போராட்டம்

ஒரு மணி நேரத்தில் இந்த அறிவிப்பு திரும்பப் பெறப்பட்டது. அதற்கு அடுத்த நாள் போக்குவரத்து துறை அமைச்சர் தனியார் டிரைவர்களை நியமிக்க மாட்டோம் என்ற உத்தரவாதத்தினை கொடுத்தார்கள்.

ஆனால் தற்போது ஒப்பந்த அடிப்படையில் கடந்த 2 நாட்களில் 430 தனியார் டிரைவர்களை இரவு பணிக்கான நியமித்து உள்ளனர்.

இதனை எதிர்த்து அண்ணா தொழிற்சங்கம் மிக விரைவில் தொழிலாளர் நலன்களுக்காக மிகப்பெரிய போராட்டத்தை ஓரிரு நாட்களில் அறிவிப்போம்.

இன்றைக்கு இந்த துறை தனியாரிடம் ஒப்படைக் கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளது. 500 பஸ்களை தனியாரிடம் ஒப்படைக்க உள்ளதாக கேள்விப்பட்டோம். அதற்காக தான் இந்த டிரைவர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இதனை அண்ணா தொழிற் சங்கம் வன்மையாக கண்டிக்கின்றது.

தவறு செய்திருந்தால்...

ஒட்டுமொத்த தொழிலாளர்களுக்காக அண்ணா தொழிற்சங்கம் குரல் கொடுக்கும் என்பதை தெரிவித்து கொள்கிறோம்.

மேலும் தவறான முறையில் ஓ.பி.ரவீந்திரநாத் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்று உள்ளார் என நீதிமன்றம் கூறியுள்ளது.

இதுகுறித்து அவர்கள் மேல்முறையீடு செய்துள்ள நிலையில் அவர்கள் தவறு செய்திருந்தால் அவர்களுக்கு உரிய தண்டனை கிடைக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது கட்சி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்