அங்கன்வாடி ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம் வாபஸ்

அங்கன்வாடி ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

Update: 2023-04-26 19:46 GMT

தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தினர் தொடர் காத்திருப்பு போராட்டத்தை நேற்று முன்தினம் மாலை தொடங்கினர். நேற்று 2-வது நாளாக சங்கத்தின் மாவட்ட அமைப்பாளர் கலா தலைமையில் காத்திருப்பு போராட்டத்தில் ஏராளமான அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்கள் கலந்து கொண்டனர். போராட்டத்தில், 10 ஆண்டுகள் பணி முடித்துள்ள அங்கன்வாடி உதவியாளர்களுக்கு எந்தவித நிபந்தனையும் இன்றி உடனடியாக பதவி உயர்வு வழங்க வேண்டும். 10 குழந்தைகளுக்கு குறைவாக உள்ள பிரதான மையங்களை சிறு மையங்கள் ஆக்குவதையும், 5 குழந்தைகளுக்கு குறைவாக உள்ள பிரதான மையங்களுடன் இணைக்கும் திட்டத்தையும் கைவிட வேண்டும். பள்ளி, கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை விடுவதுபோல, அங்கன்வாடி மையங்களுக்கும் ஒரு மாதம் விடுமுறை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இந்தநிலையில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும். பதவி உயர்வு வழங்கப்படும். மே மாதம் முதல் கோடை விடுமுறை வழங்கப்படும் என அரசு உறுதிஅளித்துள்ளதாக கலெக்டர் அலுவலக அதிகாரிகள் தெரிவித்ததன்பேரில் காத்திருப்பு போராட்டம் பிற்பகல் 3 மணிக்கு வாபஸ் பெறப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்