கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

திருப்பத்தூரில் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2022-09-08 17:17 GMT

திருப்பத்தூர் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் திருப்பத்தூர் அரசு மருத்துவமனை நிர்வாகம் மற்றும் டாக்டர்களை கண்டித்து கண்டன திருப்பத்தூர் தாலுகா அலுவலகம் எதிரில் ஆவ்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட குழு உறுப்பினர் டி.ஜாபர் சாதிக் தலைமை வகித்து கண்டன ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். ஆர்ப்பாட்டத்தில் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் பற்றாக்குறை உள்ளது. அரசு மருத்துவமனையில் டாக்டராக பணிபுரிந்துகொண்டு, தனியாக மருத்துவமனை நடத்தி வருவார்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், பணி நேரத்தில் பணியில் இல்லாத டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பிரசவத்திற்கு வரும் பெண்களை கவனிக்க கூடுதலாக டாக்டர்களை நியமிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். சி.ஐ.டி.யு. கன்வினர் கேசவன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்