முக்கூடலில் கண்டன ஆர்ப்பாட்டம்

முக்கூடலில் அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2023-04-24 18:45 GMT

முக்கூடல்:

முக்கூடல் தாமிரபரணி ஆற்றில் பிளாஸ்டிக் கழிவுகள், குப்பைகள் கலப்பதை கண்டித்து முக்கூடல் நகர அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு பாப்பாக்குடி ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் டி.கே.சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். முக்கூடல் நகர அ.தி.மு.க. செயலாளர் வில்சன் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட இணை செயலாளர் முத்துலட்சுமி, கூட்டுறவு சங்க தலைவர் சுதர்சன் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்