டாஸ்மாக் அலுவலகம் முன்பு போராட்டம்
விருதுநகரில் டாஸ்மாக் அலுவலகம் முன்பு போராட்டம் நடைபெற்றது.
திருச்சுழி தாலுகா பரளச்சி வாகைகுளம் செங்குளம் கிராம மக்கள் வாகைகுளம் கிராமத்தில் குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏற்கனவே அதிகாரிகளிடம் மனு கொடுத்துள்ளனர். ஆனால் அப்பகுதியில் டாஸ்மாக் கடை நடத்த ஏற்பாடு செய்யப்படுவதை கண்டித்தும், அதை உடனடியாக தடை செய்ய வலியுறுத்தியும் திருச்சுழி தாலுகா மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி செயலாளர் மார்கண்டன் தலைமையில் விருதுநகர் டாஸ்மாக் மாவட்ட அலுவலகம் முன்பு கிராம மக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின்பேரில் முற்றுகை போராட்டம் முடிவுக்கு வந்தது.