ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடந்தது. இதனால் அதிகாரிகள் சம்பவ இடத்தில் பேச்சுவார்த்தை நடத்தினர்.

Update: 2023-03-31 18:41 GMT

நீடாமங்கலம்;

கோரிக்கைகளை வலியுறுத்தி நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடந்தது. இதனால் அதிகாரிகள் சம்பவ இடத்தில் பேச்சுவார்த்தை நடத்தினர்.

முற்றுகை போராட்டம்

நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு திருவாரூர் மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் மற்றும் என்.எம்.ஆர். ஊழியர்கள் சங்கம், சி.ஐ.டி.யூ. அமைப்பினர் முற்றுகை போராட்டம் நடத்தினர்.ஊராட்சிகளில் பணிபுரியும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி ஆபரேட்டர்களை 60 வயது ஆகிவிட்டது என கூறி கிடைக்க வேண்டிய பணப்பலனை அளிக்காமல் ஓய்வு அளிக்கும் அதிகாரியை கண்டித்தும்,அரசாணைப்படி துப்புரவு பணி்யாளர்களுக்கு ஊதியம் வழங்காததை கண்டித்தும், தூய்மைக்காவலர்களுக்கு மாதந்தோறும் 5-ந் தேதி சம்பளம் வழங்க கோரியும், துப்புரவு தூய்மை காவலர்களுக்கு உடை, கையுறை, வண்டி, பாதுகாப்பு சாதனம் ஆகியவற்றை வழங்க கோரியும் இந்த முற்றுகை போராட்டம் நடந்தது.

கலைந்து சென்றனா்

போராட்டத்துக்கு சங்க ஒன்றிய தலைவர் எம்.பெரியசாமி தலைமை தாங்கினார். கோரிக்கைகளை வலியுறுத்தி ஊராட்சி ஒன்றிய அலுவலக நுழைவு வாசலில் சி.ஐ.டி.யூ. சங்கத்தைச் சேர்ந்த பெண்கள் உள்பட திரளானோர் தரையில் அமர்ந்து கோஷங்களை எழுப்பினர்.நீடாமங்கலம் காவல் ஆய்வாளர் சிவப்பிரகாசம் மற்றும் போலீசார் அவர்களை சமாதானம் செய்தனர்.அப்போது சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வரவேண்டும் என்றனர். இதைத்தொடர்ந்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாலசுப்பிரமணியன், நமச்சிவாயம், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் நேரு ஆகியோர் அங்கு வந்து போராட்டக்குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போதுகோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். பின்னர் போராட்டக்குழுவினர் கலைந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்